தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஷம் கலந்த தண்ணீரை பருகிய மாணவிகள் – 100 பேர் மயக்கம்..

ஆப்கானிஸ்தானில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள்  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஜெர்பியா பெண்கள் பள்ளியிலிருந்து அருகில் உள்ள கால்வாயிலிருந்து  குடிநீர் விநியோகிக்கப்படும். குடிநீரை குடித்த 100 மாணவிகள் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 60 பேர் மோசமான நிலையில்  இருப்பதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

.குறித்த சம்பவம் தொடர்பாக , மாணவிகள்  குடித்த   குடிநீரை  சோதைக்கு உட்படுத்தியபோது அதில் , ​​கடுமையான விஷம் இருந்ததாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...