Designed by Iniyas LTD
வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா …
வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டும் என்பதே தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
யாழில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் தமிழரசுக் கட்சி முடிவு எதையும் எடுக்கவில்லை என்றும், எனினும் . பெரும்பாலான தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் தெரிவாக இருப்பவர் மாவை சேனாதிராசா தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார்.எனினும்,
கடந்த சில வருடங்களாக அவருக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சிக்குமிடையில் முரண்பாடுகள் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.