தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஐந்து சிறுவர்கள் கைது!

imagesவீட்டின் பூட்டை உடைத்து கொள்­ளை­ய­டிக்க முயன்ற 5 சிறு­வர்­களை பொலிஸார் கைது செய்து சீர்­தி­ருத்த பள்­ளியில் சேர்த்­துள்­ளனர். சென்னை ஈக்­காட்­டு­தாங்கல், முனு­சாமி தெருவை சேர்ந்­தவர் ராஜேந்­திரன். இவ­ரது மனைவி பிர­ச­வத்­திற்­காக மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இவரை பார்ப்­ப­தற்­காக, நேற்று முன்­தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு ராஜேந்­திரன் மருத்­து­வ­ம­னைக்கு சென்றார். இந்­நி­லையில், ராஜேந்­தி­ரனின் தந்தை ராமன், நேற்று காலை மகன் வீட்டை பார்க்க சென்­றுள்ளார்.

2 மாடி கொண்ட வீடு என்­பதால் ராமன் மாடிப்­ப­டியில் ஏறி மாடி பகு­திக்கு சென்றார். அப்­போது, 5 சிறு­வர்கள் வீட்டின் பூட்டை அறுத்துக் கொண்டு இருந்­துள்­ளனர். இதை பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்த ராமன் கூச்­ச­லிட்­டுள்ளார். உடனே, அருகில் இருந்­த­வர்கள் திரண்டு, அந்த 5 சிறு­வர்­க­ளையும் மடக்கிப் பிடித்து, கிண்டி பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்­துள்­ளனர். விரைந்து வந்த பொலிஸார் 5 சிறுவர்களையும் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். அதில், 5 சிறுவர்களும் ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

Close

Comments
Loading...