Designed by Iniyas LTD
Comments
Trending
பா.ஜ.க. நிர்வாகி கிரித் சோமையா அளித்த புகாரின் அடிப்படையில், நொய்டாவின் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீதும், நிறுவனத்தின் உரிமையாளர் மோஹித் கோயல், தலைவர் அசோக் சத்தா ஆகியோர் மீதும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், தண்டனைச் சட்டத்தின் 420 எம் ஆவது பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோமையா அளித்த புகாரில், “251 ரூபாய்க்கு கைப்பேசிகளை விற்பது முற்றிலும் சாத்தியமற்றது. இது மக்களை ஏமாற்றும் வேலை. இந்த அறிவிப்பின் மூலம் பல கோடி வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
வழக்கு குறித்து மோஹித் கோயல் கூறுகையில், “காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதோடு அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படும்” என்றார். மேலும், முன்பே அறிவித்திருந்தது போல, நிச்சயம் 251 ரூபாவிற்கு மலிவு விலை ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு விண்ணப்பித்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Recover your password.
A password will be e-mailed to you.