தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீழ்ந்திடாத வீரத்துடன் 23வது நாளாக ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்

23 நாள் நடைபயணம் (1) 23 நாள் நடைபயணம் (2)

ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணமானது 20.02.2014 நேற்று  23வது நாளாக 18கேயெம் தூரத்தை கடந்து மார்லேன்ஹேம் நகரத்தை வந்தடைந்தது.

இன்றைய நடைப்பயணத்தில் மனிதநேய பணியாளர்களுடன் யேர்மனி நாட்டை சேர்ந்த தமிழ்  உணர்வாளர்களும் இணைந்து நடைப்பயணத்தை முன்னெடுத்தார்கள். தமிழுறவுகள் மனிதநேய பணியாளர்களை உரிமையுடன் வரவேற்று அவர்களுடைய நடைப்பயணம் வெற்றியளிக்க தொடர்ந்தும் தமது ஆதரவை  வழங்கிய வண்ணம் உள்ளார்கள்.

இன்று மனிதநேய பணியாளர்கள்  Marlenheim நகரபிதாவுடனான கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார்கள். மேலும் இன்று ஊடகங்களுடனான சந்திப்புகளும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தற்கதாகும்.

தமிழின  அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் எதிர்வரும் 24.02.2014 திங்கள் அன்று நோர்வே நாட்டினுடைய பாராளுமன்ற முன்றலில் தமிழ் வண்டி பரப்புரை பயணம் ஆரம்பமாகி பல நாடுகளை ஊடறுத்து 10.03.2013 அன்று ஐ.நா.வினுடைய மனிதவுரிமை மன்றத்தை சென்றடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தற்கதாகும்.

மேலதிக தகவல் அறியத்தரப்படும்.

Comments
Loading...