தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெனிசுலா நாட்டில் 20 ஆயிரம் சிரியா மக்கள் அமைதியாக வாழ ஆசைப்படுகிறேன்: அதிபர் நிக்கோலஸ்

Venezuelan-President-உள்நாட்டுப் போரால் பேரிழப்புக்கு ஆளாகி சிரியாவில் இருந்து அகதிகளாக வரும் 20 ஆயிரம் பேருக்கு வெனிசுலா அடைக்கலம் அளிக்க தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்து வெளியேறும் அகதிகள் மீது முன்னர் கடுமையான மனப்போக்கை கடைபிடித்துவந்த மேற்கத்திய நாடுகள், துருக்கி கடற்கரையில் சமீபத்தில் பிணமாக கிடந்த அய்லான் என்ற மூன்று வயது சிறுவனின் மரணம் உலக மனிதஉரிமை ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிரொலியாக தற்போது மென்மையான மனப்போக்கை கடைபிடித்து வருகின்றன.

இதன்விளைவாக, சிரியாவில் இருந்து அடைக்கலம் தேடி அகதிகளாக வரும் மக்களுக்கு புகலிடம் அளிக்க நான்,நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு பல நாடுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அவ்வகையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளையடுத்து, சிரியாவில் இருந்து அகதிகளாக வரும் 20 ஆயிரம் பேருக்கு வெனிசுலா அடைக்கலம் அளிக்க தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்துள்ளார்.

தனிநபர்களாகவோ, குடும்பமாகவோ சிரியாவை சேர்ந்த 20 ஆயிரம் மக்கள் எங்கள் நாட்டு நிலத்தில் அமைதியாக வாழ வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் என இந்த அறிவிப்பின்போது நிக்கோலஸ் மடுரோ குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...