தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெறிச்சோடிப்போயுள்ள இலங்கை நாடாளுமன்றம்..

இலங்கை நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை 10.30 இற்கு ஆரம்பமானது.

இதன்போது முதற்கட்டமாக தெரிவு குழு உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை அறிவித்த  சபாநாயகர் , முதலில் ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை உரையாற்ற வாய்ப்பு வழங்கியுள்ளார்.

அதன்போது  நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்றுக் கொள்ள முடியாதென தினேஷ் குணவர்த்தன   கூறியதோடு, சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்படுவதாகவும்  குற்றம் சுமத்தியுள்ளார்.

அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பாக லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு உரையாற்ற சபாநாயகர் வாய்ப்பு வழங்கிபோது, சபையில் அமர்ந்திருந்த ஆளும்தரப்பு உறுப்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தாம் நாடாளுமன்றத்தை கைவிட்டு செல்வதாக அமைச்சர் விமல் வீர்வன்ச கூறியதை அடுத்து,  ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் பகுதி முழுமையாக வெறிசோடிக் காணப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...