தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 18 செயற்கைகோள்!

gsat18இந்தியாவின் ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவையான சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை 15 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இஸ்ரோவிற்கு சொந்தமான ஜிசாட் 18 தகவல் தொடர்பு செயற்கைகோளை, பிரஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் 5 வி.ஏ. 231 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதற்கான கவுண்டன் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கயானாவில் காற்றின் வேகம் அதிகரித்து மோசமான வானிலை ஏற்பட்டதால் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவது 24 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 2 மணி அளவில் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஜிசாட் 18 செயற்கை கோள் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவையான சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை தொடர்ந்து வழங்க 48 டிரன்ஸ்பாண்டர்களை கொண்டு சுமார் 3,404 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் தற்போது ஜியோசிங்ரோனிம்ஸ் சுற்று வட்ட பாதையில் நிலை கொண்டு சேவை புரிய உள்ளது.

செயற்கைகோள் தனது சுற்றுவட்ட பாதையை அடைந்தவுடன் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்கள் வசப்படுத்துகின்றனர். அப்பொழுது முதல் இந்த செயற்கைகோள் தனது சேவையை துவங்குகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை தனது சேவையை தொடரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

Comments
Loading...