Designed by Iniyas LTD
விரைவில் வாட்ஸ் அப்பில் புதிய வசதிகள் அறிமுகம்!
தற்போது ஸ்மார்ட்போன் கையில் இல்லாதவர்களை கண்டுபிடிப்பதே சிரமம். உலகில் 80 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர் என்கின்றன ஆய்வுகள்.
ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ் அப், லைன், வீ சேட், வைபர், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவை, அனைவரையும் அதிலேயே ஆழ்ந்துபோகச் செய்கின்றன.
பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம் என்பதே உண்மை. ஆம், ஸ்மார்ட்போனில் மூழ்கி உயிரை விட்டவர்கள் உலகளவில் அதிகம்.
அதிலும் குறிப்பாக, வாட்ஸ்ஆப் உபயோகிப்பது பலருக்கும் சாப்பிடுவது, உறங்குவதைப் போல முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறிவருகிறது. இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவைக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
இதன்படி, தற்போது வாட்ஸ்ஆப் உபயோகிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 20 கோடியாக அதிகரித்துள்ளது. இதனை, வாட்ஸ்ஆப் நிறுவனர்களில் ஒருவரான பிரையான் ஆக்டன் அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளார்.
டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே, இத்தகவலை பிரையான் வெளியிட்டார்.
மேலும், தினசரி புதுப்புது அப்டேட் வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமாக, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிவதாகவும், இந்தியாவில் மட்டுமே 20 கோடி பயனர்கள் உள்ளது மிகப்பெரிய சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வாட்ஸ் அப்பில் இனி நம் ஸ்டேட்டஸ்களை யார் யாரெல்லாம் பார்த்துள்ளார்கள் என தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது Status வசதி அறிமுகமாகிறது. இதன் மூலம் இனி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களாக படங்கள், வீடியோ, GIFs போன்றவற்றை கூட வைக்கலாம்.
அதே போல, நம் ஸ்டேட்டஸ்களை யார் யாரெல்லாம் பார்த்தார்கள், எத்தனை முறை பார்த்தார்கள் எனவும் தெரிந்து கொள்ள முடியும்.
குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நம் ஸ்டேட்டஸ்கள் தெரிய வேண்டுமென்றால் அதை கூட இந்த அப்டேட் மூலம் செயல்படுத்தி கொள்ள முடியும்.