Designed by Iniyas LTD
வெளிநாட்டிலிருந்து யாழிற்கு சென்றவர்களின் வாகனம் விபத்து – 10 பேர் காயம்..
அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாரகஹவெவ 27ம் கட்டை பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றும் ஒன்றோடு ஒன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிலரே குறித்த வானில் இருந்துள்ளதாகவும், சம்பவத்தில்
குறித்த சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..