தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெளிநாட்டில் இந்தியர்களை புண்படுத்திய பிரதமர் மோடி உரை : புகார் மனு தாக்கல்

modiஇந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி  பேசியதாக கூறி  அவருக்கு  எதிராக நீதிமன்றத்தில்  புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்திய சமூகத்தினரிடையே தென்கொரியாவில் மோடி உரையாற்றும்போது, “இதற்கு முன்பு என்ன பாவம் செய்தோம்? இந்தியாவில் வந்து பிறந்து விட்டோம் என கடந்த காலங்களில் மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்; இதனால், அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது” என்று மோடி பேசினார். மோடியின் இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் விமர்சனம்  செய்து இருந்தனர்.

பிரதமர் மோடியின் பேச்சு  இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தகவல் அறியும் உரிமை ஆர்வலரான சந்தீப் சுக்லா என்பவர் கான்பூர் மெட்ரோபோலிட்டன் தலைமை நீதிபதி மீனா ஸ்ரீவத்சாவிடம் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், சியோலில் இந்திய பிரதமர் மோடியின் பேச்சை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவரது பேச்சு காயப்படுத்தும் வகையில் இருந்ததால் புகார்  மனு தாக்கல் செய்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...