தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ள முன்னாள் பிரதமர்..

ஐக்கியதேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார்.

குறித்த சந்திப்பு  இன்று பிற்பகல்(27) அலரி மாளிகையில்  இடம்பெற்றுள்ளது.

இதன் போது அரசியலமைப்பு ரீதியாக தானே பிரதமராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தமக்கிருப்பதாகவும், அதனால் தான் தாம் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டுமென ஜனாதிபதியிடம் திரும்பத் திரும்பக் கேட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 20 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சந்திப்பில் சீனத் தூதுவர் சென் ஷிய யுவான் பங்கேற்கவில்லை என்பதுடன் அவர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...