Designed by Iniyas LTD
வெள்ளம் காரணமாக கண்டாவளைப் பிரதேச செயலக ஆவணங்கள் மற்றும் அலுவலகப் பொருட்கள் சேதம்…
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலகம் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஆவணங்கள் மற்றும் அலுவலகப் பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அலுவலகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் நேற்று முன்தினம் பெய்த மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் கனகராயன்ஆற்றுப்படுக்கையை அண்டிய கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக நேற்று பிற்பகல 1.00 மணியளவில் கண்டாவளைப்பிரதேச செயலகத்திற்குள் வெள்ளநீர் புகுந்து கொண்டதால் அங்கிருந்த உத்தியோகத்தர்கள் மற்றும் ஒரு சில ஆவணங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.
இந்நிலையில் இன்றும் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பிரதேச செயலகத்திற்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் தற்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலர் அலுவலகத்திற்குள் சென்;று பொருட்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

