Designed by Iniyas LTD
வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளபாதிப்புக்கான காரணங்களை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதிதலைமையில் உயர்மட்ட குழு அமைக்கக்கோரி சென்னையை சேர்ந்த ராஜிவ்ராய் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்விசாரணைக்கு வந்தது. மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக மீட்புப்பணிகள் குறித்த அறிக்கை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், ஏரிகளை பராமரிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும் எனவும், மழை வெள்ள நிவாரணப் பணிகளையும், சேதங்களை சீரமைப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படும் எனநம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி பிப்ரவரி 9ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.