Designed by Iniyas LTD
ரூபாய் நோட்டுக்கள் எந்த நிலையில் இருந்தாலும் வங்கிகள் பெற்றுக்கொள்ளும் – ரிசர்வ் வங்கி ஆளுநர்
ரூபாய் நோட்டுக்கள் எந்த நிலையில் இருந்தாலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.![]()
பேனாவால் எழுதப்பட்ட அல்லது கிறுக்கப்பட்ட மற்றும் கிழிந்த அல்லது மிகவும் நைந்த நிலையில் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் வருகிற 1ம் திகதி முதல் செல்லாது என்று அண்மையில் நாடெங்கும் ஒரு தகவல் பரவியது. இதையடுத்து விளக்கம் அளித்துள்ள ரகுராம் ராஜன், ரூபாய் நோட்டுகள் எந்த நிலையில் இருந்தாலும் செல்லும், என்றும், அதை வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்படி வங்கிகளில் பெறப்படும் நைந்த, கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மீண்டும் புழக்கத்தில் விடாவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளத்துக் குறிப்பிடத்தக்கது.