Designed by Iniyas LTD
வேணாவில் மக்களுடன் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் சந்திப்பு..
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட வேணாவில் கிராம மக்களது குறைகள் தேவைகளை கேட்டறியும் மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று மாலை 6 மணியளவில் வேணாவில் வண்ணன் சனசமுக நிலைய வளாகத்தில் இடம்பெற்றது
இந் நிகழ்வின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு, மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களும் அவரது கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டு மக்களது தேவைகளை கேட்டறிந்தனர்
குறித்த கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது தேவைகளை பிரதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர் இதன்போது தமது பகுதியில் காணப்படும் பல்வேறு முக்கிய குறைபாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்தனர்
இதன்போது விடயங்களை கேட்டறிந்த பிரதி அமைச்சர் முடிந்தளவு பிரச்சனைகளை தீர்ப்பதற்காண நடவடிக்கைகளை பெற்று தருவதாக தெரிவித்ததோடு குறித்த பகுதியில் மைதான புனரமைப்பு பணிக்கென சுமார் பத்து லட்சம் நிதியை பெற்று தருவதாகவும் உறுதியளித்தார்.

