Designed by Iniyas LTD
வைகோ – ஸ்டாலின் சந்திப்பு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது தனது சகோதரர் மகன் திருமணத்திற்கான அழைப்பிதழை ஸ்டாலின் கொடுத்தார்.
இந்த சந்திப்பு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியும் திரளும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் நெருங்கும் போது எதிர்க்கட்சிகள் ஒற்றிணைவது வெளிப்படையாகவே தெரியும் என்றார்.