Designed by Iniyas LTD
ஶ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவை சந்தித்த சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் ஶ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
விக்டர் சகாரியா தலைமையிலான இந்தக் குழுவில், ஸ்ரேபூஷண் குப்த் டோமா, பெட்ரோஸ் மைக்கேலிடஸ், ஜூன் லோபஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்ற குறித்த குழுவினர், அதன் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, மற்றும் ஆணையாளர்கள் ரமணி முத்தெட்டுவேகம, அம்பிகா சற்குணநாதன் ஆகியோரைச் சந்தித்து, கரிசனைக்குரிய விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை கடந்த 2ஆம் திகதி சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
மேலும் ஐ.நா குழுவினர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையின் பல இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.