தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்கன் விமான சேவை சீனாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளது

சீனாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் திமுத்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவின் 15 உப நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.உப நகரங்களில் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் எந்தெந்த நகரங்களில் விமான சேவைகளை நடாத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.Sri-Lankan-Airlines-Boeing-787-800

தற்போது சீனாவின் நான்கு நகரங்களுக்கு வாரமொன்றில் 15 விமானப் பயணங்களை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேற்கொள்கின்றது. இலங்கையின் பிரதான சுற்றுலா சந்தைகளில் ஒன்றாக சீனா அடையாளம் காணப்பட்டுள்ளது என திமுத்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...