தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! இந்தியா-அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ள ஸ்ரீலங்கா

sri-lanka-EU-flags-300x200இலங்கை அரசாங்கத்துக்கு வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்துள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு 11 நிபந்தனைகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஏப்ரல் 26ஆம் திகதிக்கு முன்னதாக, இந்த நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

மேலும்  பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது.
கால அவகாசத்தைக் கோருவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளிக்கும் முகமாக மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. குறித்த குழுவில் நீதித்துறையில் பாண்டித்தியம் பெற்ற இருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நாவிற்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் நிக் கெலியை சந்தித்து காலஅவகாச கோரிக்கை தொடர்பில் மேற்படி குழுவினர் விளக்கமளிக்கவுள்ளனர். இதேவேளை, ஐ.நாவில் கால அவகாசத்தைக் கோருவதற்கு இந்தியாவின் ஆதரவையும் அரசு கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Comments
Loading...