தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீ கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது!

யாழ்-நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 23 தமிழக  மீனவர்கள் ஸ்ரீலங்கா  கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இத்துடன் இவர்களது ரோலர் படகுகள் 5 கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த படகுகள் வடக்கு கடற்படை தலைமையகத்தால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்,மீனவர்கள் யாழ்-உதவி மீன்பிடி ஆய்வாளர் அலுவகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments
Loading...