தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஹக்கேர்ஸை கைதுசெய்ய பல்கலைக்கழகத்திடம் உதவி!

russian-hackerபங்களாதேஷ் மத்தியவங்கியின் கணக்கில் அத்துமீறி உள்நுழைந்து (ஹெக் செய்து) 20 மில்லியன் டொலர்களை இலங்கையில் உள்ள நிறுவனத்துக்கு மாற்றிய சம்பவம் தொடர்பில் கைப்பற்றப்பட்ட கணினி, உபகரணங்கள் இரண்டு அலைபேசிகள் என்பவற்றை மொரட்டுவை பல்கலைக்கழக கணினி பிரிவுக்கு அனுப்பிவைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகளின் ஊடாக குறித்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.   இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன் வழக்கு விசாரணைகள் செப்டெம்பர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

Comments
Loading...