Designed by Iniyas LTD
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி கைது!
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்தவர் தாரிக் பண்டிட். அங்கு பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வந்த இவரை இந்திய படையினர் வலைவீசி தேடி வந்தனர்.
புல்வாமா மாவட்டத்தின் கரிமாபாத் அருகே உள்ள நேவா-பிங்லனா சாலையில் தீவிரவாதி தாரிக் பண்டிட் சென்று கொண்டிருப்பதாக நேற்று ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.
உடனே ராணுவமும், காஷ்மீர் போலீசாரின் சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து அந்த சாலையில் நடமாடும் சோதனைச்சாவடியை அமைத்தனர். அதன் மூலம் சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டன.
அப்போது ஒரு வாகனத்தில் தீவிரவாதி தாரிக் பண்டிட் வந்தார். உடனே அவரை ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மி.மீ. கைத்துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் தீவிரவாதி தாரிக் பண்டிட் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.