தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஹொரணை பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ள

சுழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடாத்தி செல்லப்பட்ட ஹொரணை பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் குறித்த தொழிற்சாலை வளாகத்தை பார்வையிட்ட பின்னர்  அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, தொழிற்சாலையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அத்தொழிற்சாலையின் முகாமையாளரை  இன்று ஹொரணை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட விச வாயு கசிவால் 5 பேர் உயிரிழந்ததுள்ள நிலையில் மேலும் பலர் சுவாசக் கோளாரால் ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...