Designed by Iniyas LTD
10.03.2009 அன்று சிங்கள இனவெறிபடையின் எறிகணைதாக்குதலில் வீரகாவியமான “தமிழீழ நிதிப் பொறுப்பாளர்” தமிழேந்தி அப்பா அவர்களின் நினைவு நாள் இன்று.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறை திறம்பட செயலாற்றியவர் தமிழேந்தியப்பா.
10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் கேணல் தமிழேந்தியப்பா அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டவர்.
தாயகத்தில் பல்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்.
தமிழேந்தியப்பா அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.