Designed by Iniyas LTD
1996.03.10 அன்று இந்தியத்தின் சதியால் கடலிடைவெடியாகி காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன் கப்டன் தோழன் ஆகியோரின் நினைவு நாள் இன்று.

தமிழீழ விடுதலைப்போரின் தியாகத்தின் உச்சங்கள் அவர்கள்.
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கும், மனித வாழ்வில் ஓர் வரையறையைத் தாண்டிய விடுதலையின் உச்சங்கள் இவர்கள்.
எம்மினத்தின் விடியலின் போராட்டம் தேசம் விட்டு பல கடல் எல்லைகள் தாண்டி விரிந்து சென்றும் எம் தேசத்தை தாங்கியவர்கள் பலர், அதில் பலரது முகமும் தெரியாது, தியாகமும் வெளித் தெரிவதில்லை .
ஆழக்கடலோடி எம் தேசத்துக்கு துணைநின்றவர். கடலிடை வழிமறிக்கப்பட்டு தம்மை தாமே அழித்து வெடியானார்கள்.
தாயகம் வாழ தம்மை கடலிடை அழித்திட்ட விடுதலையின் உச்சங்களுக்கு நாங்கள் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்