Designed by Iniyas LTD
10 ராமேஸ்வர மீனவர்களின் காவல் நீட்டிப்பு: மன்னார் நீதிமன்றம் உத்தரவு
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வர மீனவர்கள் 10 பேரின் காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா சிறையில் உள்ள மேற்படி மீனவர்களை வரும் ஜனவரி 8 ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 மீனவர்களின் காவல் 4 ஆவது முறையாகவும், 4 பேரின் காவல் 2 ஆவது முறையாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 22 ஆம் தேதி 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.