தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

13 நோயாளிகளை படுகொலை செய்த மருத்துவ தாதி!

_89015023_policehospitalஇத்­தா­லிய மருத்­து­வ­ம­னை­யொன்றில் அனு­ ம­திக்­கப்­பட்­டி­ருந்த 13 நோயா­ளி­களை படு­கொலை செய்த குற்­றச்­சாட்டில் பதி­வு­செய்­யப்­பட்ட மருத்­து­வத்­தா­தி­யொ­ரு­வரை கைது­செய்­துள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் நேற்று வியாழக்­கி­ழமை தெரி­வித்தனர்.

போஸ்டா பொனினோ (56 வயது) என்ற மேற்­படி பெண் மருத்­து­வத்­தாதி 2014 ஆம் ஆண்­டுக்கும் 2015 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் துஸ்­கனி பிராந்­தி­யத்தில் பியொம்­பினோ நக­ரி­லுள்ள மருத்­து­வ­ம­னை­யொன்றில் மேற்­படி படு­கொ­லை­களைச் செய்­துள்­ள­தாக பொலிஸார் கூறு­கின்­றனர். அவரால் கொல்­லப்­பட்ட நோயா­ளிகள் 61 வய­துக்கும் 88 வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­க­ளை­யு­டை­ய­வர்­க­ளாவர்.

அவர்கள் அனை­வரும் கடும் சுக­வீ­ன­முற்­றி­ருந்த போதும் உயி­ரா­பத்­தான நிலையை எதிர்­கொண்­டி­ருக்­க­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குறிப்­பிட்ட மருத்­துவத் தாதி அவர்­க­ளுக்கு குருதி உறைவைத் தடுக்கும் மருந்தை அள­வுக்­க­தி­க­மாக வழங்கி உட­லுக்குள் குருதிக் கசிவை ஏற்­ப­டுத்தி அவர்­களை படு­கொலை செய்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த சம்­ப­வத்­துக்கு இத்­தா­லிய சுகா­தார அமைச்சர் பியற்றைஸ் லொரென்ஸின் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

38 நோயா­ளர்­களைப் படு­கொலை செய்த குற்­றச்­சாட்டில் 2014 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் டாயியலா பொக்கியலி என்ற மருத்துவத்தாதி கைது செய்யப்பட்டமை உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத் தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...