தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

14 தொகுதிகளின் உத்தேச பட்டியல் விஜயகாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு ஒதுக்கப்படும் 14 தொகுதிகளின் உத்தேச பட்டியல் விஜயகாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் 14 தொகுதிகளுக்கும் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளார். விஜயகாந்

அதிகாரப்பூர்வ பட்டியல் கிடைத்ததும் தே.மு.தி.க. வேட்பாளர்களை இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர் அறிவிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது தேர்தல் பிரசாரத்தை திருவள்ளூரில் மாலை 3 மணிக்கு தொடங்க இருக்கிறார். வரும் 27-ம் திகதி வரை 14 நாட்கள் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, 14-ம் திகதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் தொகுதி கும்மிடிப்பூண்டி (மாலை 3 மணி), வடசென்னை தொகுதி கொளத்தூர் (மாலை 5 மணி), ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பல்லாவரம் (இரவு 7 மணி) ஆகிய இடங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 1

15-ம் திகதி அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு, ஆரணி தொகுதி செய்யாறு ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜயகாந்த் மாலை 7 மணிக்கு வேலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அவர் 27-ம் திகதி வரை பல்வேறு பகுதிகளில் முதல் கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார்.

Comments
Loading...