தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை அறிவித்து விடுவோம் – இல கணேசன்

பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர்  இல.கணேசன் முன்னிலையில் அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன், வடபழனி தொழில் அதிபர் பரந்தாமன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இன்று இரவு(நேற்று வியாழக்கிழமை) அல்லது நாளை (இன்றைக்குள் வெள்ளிக்கிழமை) அறிவித்து விடுவோம். அதனை தொடர்ந்து பா.ஜ.க. வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள். கூட்டணி கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் இடங்களில் வேட்பாளர்களை அறிவிப்பார்கள்.

இல கணேசன்தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 14-ம் திகதி  முதல் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய போவதாக அறிவித்து இருக்கிறார். பா.ஜ.க. கூட்டணியை அவர் எந்த அளவுக்கு மனதால் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. இதற்காக அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

தொகுதி பங்கீடு பிரச்சினையில் தே.மு.தி.க., பா.ம.க. இடையே அதிருப்தி இருப்பதாக கூறப்படுவது தவறு. நாங்கள் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம். தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளுக்கிடையே எங்கள் உறவு சுமூகமான நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...