Designed by Iniyas LTD
சத்தீஸ்கரில் 8 அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் தொடர்!
8 அணிகள் கலந்து கொள்ளும் உலக ஹாக்கி லீக் தொடர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்திய-அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான போட்டி, மாலை ஆறரை மணிக்குத் தொடங்குகிறது. இரவு எட்டரை மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் ஜெர்மனி அணி, நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.
சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி, அன்மையில் நடைபெற்ற நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனான தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளது. இதனால் சர்வதேச தரநிலையில் எட்டாவது இடத்திலிருந்து, ஆறாவது இடத்திற்கு முன்னேறியது.
உலக ஹாக்கி லீக் தொடரிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என தலைமை பயிற்சியாளர் ROELANT OLTMANS நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
