Designed by Iniyas LTD
15 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 15 பேரையும், 3 படகுகளையும், இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. இவர்களில் 6 மீனவர்களை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஞ்சிய 9 மீனவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.