தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

1990 இல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவு நாள் – கிழக்கு பல்கலைக்கழகத்தில் ..

1990ம் ஆண்டு  செப்ரெம்பர்  மாதம் 5 ஆம் திகதி வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த மக்களில் 141 பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்,

இந்த சம்பவத்தை நினைவு கூறும்முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்,

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு ஆகியன இணைந்து சம்பவ நினைவு தினத்தை  ஏற்பாடு செய்தனர்,

இந்த நிலையில் கிழக்கு  பல்கலைக்கழக மண்டபத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் , இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பல்கலைக்கழக முன்றலில் நினைவேந்தல்  நிகழ்வு நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது,

Comments
Loading...