Designed by Iniyas LTD
2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – அவுஸ்ரேலியா மோதல்
உலகக்கிண்ணத் தொடரில் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது அரையிறுதி ஆட்டத்தில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா நிதான ஆட்டத்தை ஆடி வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா, முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ஞ், வார்னர் களமிறங்கினர்.
வார்னர் தொடக்கத்திலே அதிரடியை தொடர்ந்தார். 7 பந்தில் 12 ஓட்டங்கள் (1 சிக்சர், 1 பவுண்டரி) குவித்த போது, உமேஷ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் ஸ்டீவன் சுமித் ஆரோன் பின்ஞ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தனர். பின்ஞ் அரைசதம் கடந்தார்.
சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் சுமித் சதம் விளாசினார். 93 பந்துகளில் 105 ஓட்டங்கள் (11 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்த போது உமேஷ் பந்தில் வெளியேறினார்.
அவுஸ்திரேலியா 35 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 206 ஓட்டங்களை குவித்துள்ளது. தற்போது மேக்ஸ்வெல், பின்ஞ் உடன் ஜோடி சேர்ந்து விளாச தொடங்கியுள்ளார்.