Designed by Iniyas LTD
20 வது திருத்தச் சட்டம் நாட்டை படுகுழியில் தள்ளும் செயல் – விமல்
20 வது திருத்தச் சட்டமானது நாட்டை படுகுழியில் தள்ளும் ஒரு செயற்பாடாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
20 வது திருத்த சட்டத்தை ஒரு தனிநபர் மசோதாவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதோடு 20 வது திருத்த சட்டத்தின் நோக்கம், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ரத்து செய்வது அல்ல, ஜனாதிபதி தேர்தலை ஒழிக்க வேண்டும் என்பதே என்றும், அதற்கு அரசாங்கம் நிலையற்றதாக இருக்க வேண்டும் மற்றும் நிர்வாகி பலவீனமாக இருக்க வேண்டும், தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிலாபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே விமல் வீரவங்ச இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.