Designed by Iniyas LTD
2014 – 2015 ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக பிரன்டன் மெக்கல்லம்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைக்கான விருதுகள் வழங்கும் விழா ஆக்லாந்தில் நேற்று நடந்தது.
2014 – 2015 ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக அணித்தலைவர் பிரன்டன் மெக்கல்லம் தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்த உலக கிண்ணப் போட்டியில் ஆக்ரோஷமான செயல்பட்டு நியூசிலாந்து அணியை முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு மெக்கல்லம் அழைத்துச் சென்றார்.
இதனை கௌரவிக்கும் வகையில் மெக்கல்லத்துக்கு Sir Richard Hadleeவிருது வழங்கப்பட்டது.
ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர், 20 ஓவர் போட்டி வீரர் ஆகிய மூன்று விருதுகளையும் கனே வில்லியம்சன் தட்டிச் சென்றார்.
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி சுசி பேட்ஸ், ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வானார்.