Designed by Iniyas LTD
2017ஆம் ஆண்டை வரவேற்கவுள்ள எரிகற்கள் பொழிவு!
2017ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் எரிகற்கள் பொழிவு, வானில் ஒரு விருந்தாக மக்களுக்கு காட்சி தரவுள்ளது.
நம் சுற்றி உள்ள அண்டத்தில் அதிசய நிகழ்வுகளுக்கு என்றுமே பஞ்சமில்லை. வானில் தெரியும் நட்சத்திரங்கள், கோள்கள், திடீரென்று தோன்றும் எரிகற்கள் உள்ளிட்டவை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில், எரிகற்கள் பொழிவு வானில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது.இந்த நிகழ்வு ஜனவரி 3 மற்றும் ஜனவரி 4 ஆகிய தேதிகளில் வானில் தெரியும் என்று கூறியுள்ளது.
ஆசியாவில் வசிப்பவர்களுக்கு இரவு 7.30 மணியளவில் தென்படும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் இந்த நிகழ்வு ஏற்படும். வானில் சுற்றி வரும் 2003 EH1 என்ற எரிகல் புவியை கடந்து செல்லும் போது, அதன் பகுதிகள் சிதறுகின்றன.
இவை புவியின் வளிமண்டலத்திற்குள் வரும் போது எரிந்து மறைந்துவிடுகின்றன. இதை பார்ப்பதற்கு நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் மழையாக பொழிந்து, மறைவது போல் தோன்றும். இதனை Quadrantid Meteor என்று அழைக்கின்றனர். வானில் கிட்டதட்ட 2 முதல் 3 மணி நேரம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.