Designed by Iniyas LTD
2020 ஒலிம்பிக் போட்டிக்காக கட்டப்பட்டுள்ள மைதானம் திறப்பு..

ஜப்பானின் டோக்கியோவில், 2020 ஒலிம்பிக் போட்டி மற்றும் பாரலிம்பிக் போட்டிகளுக்காக கட்டப்பட்டுள்ள புதிய வில்வித்தை மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வருகிற 2020 இல் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்காக தனித்தனியே 8 மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் முதலாவதாக யுமெனோஷிமா பூங்காவில்(Yumenoshima Park) அமைக்கப்பட்டுள்ள வில்வித்தை மைதானத்தை இளவரசி சுகுகோ(Tsuguko) திறந்து வைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து இருமுறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹிரோஷி யமமோட்டோ மற்றும் பிற வில்வித்தை வீரர்கள் அம்புகளை எய்து, அங்கு பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.