தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மானிப்பாய் பெரிய மாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் பாவனைக்கு உதவாத பொருட்கள்..

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் இருந்து பாவனைக்குதவாத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய மாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் பெருந்தொகையான தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர்களிலான பொதிகள் மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரப்படியினரால் குறித்த பொருகள் மீட்கபட்டுள்ளன.

இன்று பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...