தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

25-வது சுல்தான் அஸ்லான் ஷா ஆக்கி தொடர்

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 7 அணிகள் பங்கேற் றுள்ள 25-வது சுல்தான் அஸ்லான் ஷா ஆக்கி தொடர் மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது.  hockey

இதில் தனது தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை தோற்கடித்த இந்திய அணி, 2-வது லீக்கில் ஆஸ்திரேலியாவிடம் 1-5 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.  இந்த நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று கனடாவுடன் மோதியது. இதில் 3-வது நிமிடத்தில் இந்திய வீரர் நிக்கின் திம்மையா கோல் அடிக்க, 23-வது நிமிடத்தில் கனடா வீரர் கீகன் பெரீரா பதில் கோல் திருப்பினார். நிறைய கோல் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் வீணடித்ததால் நெருக்கடி ஏற்பட்டது.  41-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத்சிங், ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை பயன்படுத்தி கோலாக்கிய பிறகே இந்திய வீரர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அதைத் தொடர்ந்து 57-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சர்தார்சிங் கடத்திக் கொடுத்த பந்தை சக வீரர் தல்விந்தர் சிங் கோலுக்குள் திணித்து அசத்தினார். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி 2-வது வெற்றியை (6 புள்ளி) பதிவு செய்ததுடன், இறுதிப்போட்டி வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது. இந்திய அணி அடுத்து பரம எதிரியான பாகிஸ்தானை (இந்திய நேரப்படி பிற்பகல் 3.35 மணி) நாளை சந்திக்கிறது.  மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்து 3 வெற்றிகளுடன் (9 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறது. இன்னொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை நொறுக்கியது. 4 ஆட்டங்களில் ஆடியுள்ள நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

Comments
Loading...