தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

33 சிறிலங்கா மீனவர்கள் கைது

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் 33 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.fish

மன்னாருக்கு வடக்கேயுள்ள அந்தோனிபுரம் கடற்பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைதாகியுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள் வசமிருந்து கடல் அட்டைகள் ஒரு தொகை மற்றும் நான்கு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் உதவி கடற்தொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments
Loading...