Designed by Iniyas LTD
360 இற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை…
நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வௌியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மதங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட 360 இற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவற்றில் பெரும்பாலானவை தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு சமூக வலைத்தளங்களூடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேரக் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது.
மேலும் இவ்வாறான கணக்குகளை முடக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.