தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

4043 கிராம் எடையுடைய தங்கவளையல்கள் விமானநிலையத்தில் பறிமுதல்..

கட்டாரில் இருந்து இலங்கைக்கு தங்க வளையல்களை கடத்த முற்பட்ட ஒருவர் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு விமான சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் கட்டாரிலிருந்து  சென்ற   குறித்த சந்தேகநபரிடம், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே  பயணப் பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க வலையல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய, இரத்தினபுரியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து 4043 கிராம் எடையுடைய, 21 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான, 423 தங்க வளையல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...