Designed by Iniyas LTD
67 லட்சம் அமெரிக்க டொலர்களுடன் மாலைதீவு பிரஜை கட்டுநாயக்காவில் கைது
67 லட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களுடன் மாலைதீவு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலைதீவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 53 வயதுடைய அந்நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் பயணப்பையில் 47 ஆயிரம் அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளார்.