Designed by Iniyas LTD
7ம் திகதி இலங்கையில் சுனாமி எச்சரிக்கை?
சர்வதேச சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகையை, எதிர்வரும் 7ம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக, இந்த சுனாமி அனர்த்த எச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படவுள்ளது.
14 மாவட்டங்களில் சுனாமி அனர்த்த எச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி, தெரிவித்துள்ளார்.
சுனாமி ஏற்பட்டால் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக, இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதோடு, 2004ஆம் ஆண்டு நாட்டை நிலைகுலைய வைத்த சுனாமிக்கு அனர்த்தத்துக்குப் பின்னர், இவ்வாறான பல ஒத்திகை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.