தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம்

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13–ந்தேதிகளில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 5 வீரர்களை தங்கள் அணியில் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள்.கம்பீர் நரின்

முதல் 3 ஆட்டங்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் 2011–ம் ஆண்டு முதல், நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று வருகிறார். கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012–ம் ஆண்டில் ஐ.பி.எல். கோப்பையை உச்சி முகர்ந்தது. ஐ.பி.எல். போட்டியில் 88 ஆட்டத்தில் ஆடி இருக்கும் கம்பீர் 2,471 ரன்கள் குவித்துள்ளார்.

இதேபோல் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீசை சேர்ந்த மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சுனில்நரின் அதிக விக்கெட்டுகளை சாய்ப்பதுடன், பேட்ஸ்மேன்கள் ரன் விகிதத்தை கட்டுப்படுத்துவதில் நேர்த்தியாக செயல்பட்டு வருகிறார். எனவே கேப்டன் கம்பீர் மற்றும் சுனில்நரின் ஆகியோரை தொடர்ந்து கொல்கத்தா அணியில் தக்க வைத்து கொள்ள அந்த அணி நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. இந்த தகவலை ஐ.பி.எல். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments
Loading...