Designed by Iniyas LTD
73 தமிழக மீனவர்கள் விடுதலை!
எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 73 பேரை விடுதலை செய்யவுள்ளதாக, மீன்பிடித்துறை அமைச்சு இன்று சனிக்கிழமை (23) அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீடுகள் காரணமாக, குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 6ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கை கடற்பரப்புக்குட்பட்ட பகுதிகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும், இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் விடுவிக்கப்பட மாட்டாது என்று, மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று வெள்ளிக்கிழமை (22) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.