Designed by Iniyas LTD
96 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை!
இலங்கை சிறையிலுள்ள இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 96 பேரையும் விடுதலை செய்ய ஸ்ரீலங்கா அரசு நீதிமன்றங்களுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் எமெரிட் தெரிவித்துள்ளார்.இராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பகுதியைச் சேர்ந்த 49 மீனவர்கள் உட்பட 96 பேரை கடந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மன்னார் மற்றும் ஊர்க்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுராதபுரம், யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
தொடர்புடைய பதிவு
இந்தநிலையில், மீனவர்களை விடுவிக்ககோரி இந்திய மத்திய அரசு இலங்கை அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதன் பேரில் சிறையிலுள்ள 96 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு அந்தந்த நீதிமன்றங்களுக்கு திங்கட்கிழமை பரிந்துரை செய்துள்ளது.
அதன் பேரில் சிறையிலுள்ள தமிழக மீனர்கள் 96 பேரும் மார்ச் 24ஆம் திகதி விடுவிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர் எமெரிட் தெரிவித்தார்.