தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் உதவிப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட ஐந்து பொலிஸார்  பணி நிறுத்தம்..

யாழ்  நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்றிருந்த பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளரால் யாழ்  பொலிஸ் நிலையப் பெரும் குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து  பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் கவனத்திற்கு  குறித்த விடயத்தினை கொண்டு சென்றுள்ளார்.

குறித்த கொள்ளைசம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட ஐந்து பொலிஸார்   அசிரத்தையுடன் செயற்பட்டதாக குற்றஞ் சுமத்தப்பட்டு  பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இதேவேளை  யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையப் பெருங் குற்றப் பிரிவில் கடமையாற்றிய 17 பொலிஸார்  அசிரத்தையுடன் செயற்பட்டமைக்காக   இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...