தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை அடித்துக்கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்…

மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்  ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில்  அவரது மகன் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது

வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காயமடைந்த மகன் தெரிவிகையில்,  நேற்றைய தினம் வீதியில் சென்ற தன்னுடன் சிலர் முரண்பட்டுக்கொண்டதாகவும், அதன்பின் அவர்கள் மேலும் சிலருடன் 8 பேராக தனது வீட்டுக்கு , கையில் பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வந்து தன்னை தாகியதாக அவர் கூறியுள்ளார்.

அதனை தடுக்க வந்த தன்னுடைய தாயாரையும் அவர்கள் தாக்கியதால் அவர் மரமடைந்ததாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

குறித்த  பெண்ணின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை  சம்பவம் தொடர்பில்  மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...